பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 தான் இருக்கிறது. உயர்வு தாழ்வு என்பதை இப்படித் தான் பார்க்க வேண்டும். மா : 1: எங்களுக்கு எல்லாம் தெரியும், போடா! உன் வழி யைப் பார்த்துக் கொண்டு. (மாணவர்கள் ஒவ்வொருவராகக் கலந்து செல்கின்றனர். வள்ளுவன் அவர்களே இரக்கமாகப் பார்த்துப் புன்னகை புரிகிருன்.) காட்சி-7 காலம் : பிற்பகல் இடம் : துள்ளுவ முதலி வீடு உறுப்பினர் : வள்ளுவன், துள்ளுவன், கோதை, திருமூலர் - - (வள்ளுவன் கூடத்தின் ஒருபக்கம் அமர்ந்து வருத்தத்துடன் ஏ தோ சிந்தித்துக் கொண்டு இருக்கிருன். கோதை அவ னுடைய முகவாட்டத்தைக் கவனித்து - விட்டு ஆறுதல் கூற அருகே செல்லுகிருள்.) கோதை : என்ன கண்ணு! ஏன் ஒரு மாதிரியா இருக்கே? வள் : (திடுக்கிட்டு நிமிர்ந்து) உம். என்னம்மா கேட்டே? கோ : குருகுலத்திற்குப் போய் வந்ததிலிருந்து என்னமோ மாதிரியா இருக்கியே. வாத்தியார் ஏதேனும் கோவிச்சுக் கிட்டாரா? அல்லது உடம்புக்கு......... துன் : ஏன்? நயின! யாராச்சும் ஏதாச்சும் சொன்னங்களா? வள் : அதெல்லாம் ஒன்றுமில்லே, அப்பா! . . துள் : யார் எது சொன்னலும் என்ன நடந்தாலும், நீ தான் வெளியே மூச்சே விடமாட்டியே. நல்ல பிள்ளையப்பா நீ!