பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 யினும் கிடைத்தால் சாப்பிடுவேன். இல்லையானல், பல நாள் பட்டினி கூடக் கிடப்பேன். எனக்கு உதிர் சருகு, கந்த மூலங்கள் கிடைத்தால்கூடப் போதும். உண்டு பசி யாறுவேன். உனக்கு இதெல்லாம் ஒத்து வருமா? வள் : உங்களுடன் எல்லா விதத்திலும் ஒத்துப் போவேன், சாமி. நிலேமைக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள நான் பழகிக் கொண்டிருக்கிறேன். திரு : இவ்வளவு சிறுவயதில் உனக்கு எதற்கப்பா இந்தக் காட்டு வாழ்க்கை? வள் : இதற்கெல்லாம் வயது வரம்பு இருக்கிறதா, சாமி? எனக்கு என்னவோ ஆணவம் பிடித்த இந்தச் சமுதாயத் தில் இருக்கச் சிறிதும் விருப்பமில்லை. பேதபுத்தி உள்ள இந்த மனிதர்களைப் பார்த்தாலே எனக்குக் கொஞ்மும் பிடிக்கவில்லே. திரு : சபாஷ்! சரியான ஆளுதான் நீ. மனப்பக்குவப்பட் டிருக்கிருய், வா, நாம் போகலாம். வள் : உங்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன், சாமி! இதோ வந்துவிட்டேன். திரு : இப்போது நாம் நேராகத் திருக்கழுக்குன்றத்திற்குத் தான் போகிருேம். கழுக்குன்றத்திற்குப் போனுல் காணுத காட்சி யெல்லாம் காணலாம். கைலாசத்தைக் கூடப் பார்க்கலாம். - - - வள் : அப்படியா? சாமி! திரு : ஆமாம். அந்த மலேயில்ே பெரிய பெரிய மகான்க ளெல்லாம் தவம் செய்து கொண்டிருக்கிருர்கள். நான்கு வேதங்களே மலைகளாக இருப்பதாகச் சொல்லப்படுவதால் அதை நம்பியிருப்பவர்களெல்லாம் இங்கு வந்து தங்கு கிருர்கள். s வள்: உம். அப்படியா?