பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 மூன் : உஸ். பேசாமலிருங்கள். அரசர் காதில் விழப் போகி - • لاتيني (f} (மேல் உப்பரிகையில் அரசியாருடன் அரச குடும்பப் பெண்களும் பிரபுக்களின் பெண் களும் கூடியிருந்து அரசன் அழைத்துப் போகும் வள்ளுவரைப் பார்த்துப் பலவாறு பேசுகின்றனர். வாசுகி அவரைக் கடைக் கண்ணுல் கண்டு களிக்கிருள்.) ஒருத்தி : என்னடி! அப்படிப் பார்க்கிருய், வாசுகி? இரண்டாமவள் : அரசனுடன் செல்லும் ஆணழகனப் பார்க் கிருள். வாசுகி (நாணத்துடன்) போங்கடி. உங்களுக்கு இது தான் வேலே. என்னே எப்போது பார்த்தாலும் பரிகாசம் செய்வது, ஒரு : சும்மாவா சொல்லுகிருேம்? நீ அந்த வீரனை விழுங்கி விடுவது போல் பார்க்கவில்லையா? இர : கண்ணிருந்தால் பார்க்கிறது. இதற்குப் போய் அவளேக் கேலி செய்கிறீர்களே. நீங்களும் பார்த்தீர்களில்&லயா? மூன் : நாங்கள் பார்த்ததற்கும் அவள் பர்ர்த்ததற்கும் வித்தி யாசம் இருப்பது உனக்குத் தெரியவில்லையே! இர : அவள் எப்போதும் வாசுகி கட்சியடி. இருவருக்குள்ளும் எவ்வளவோ அந்தரங்கம். ஒரு : எதற்கும் நேர் பார்வை இருக்கணும். கடைக்கண்ணுல் யாருக்கும் தெரியாமல் பார்த்தால் கள்ளப்பார்வை என்று தானே பொருள். - - * இச்சமயம் இப்பெண்களின் பேச்சரவம் கேட்டோ என்னவோ! வள்ளுவர் திரும்பி மேலே பார்க்கிறர். அவருடைய கண் பார்வை வாசுகி மீது விழுகிறது. சில விநா டிகள் அவர் கண்கள் இமைக்காமலே நிலத்து நின்று விடுகின்றன).