பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 யாக ஊழியம் செய்து கொண்டிருப்பேன் என்று உறுதி கூறுகிறேன். எல்லோருக்கும் என்பணிவார்ந்த வணக்கம். (மீண்டும் மகிழ்ச்சியொலி ஒலிக்கிறது.) அர இத்துடன் அவை முடிகிறது. (அரியணையிலிருந்து எழுந்து செல்கிறன். வள்ளுவரை எல்லோருஞ் சூழ்ந்து கொண்டு பாராட்டுகின்றனர். உப்பரிகையிலிருந்த மகளிர் வாசுகியைக் கேலிசெய்துகொண்டே போகின்றனர்.) காட்சி-10 காலம் : மாலே இடம் : அந்தப்புரப் பூஞ்சோலே உறுப்பினர் : வாசுகி, தோழி, வள்ளுவர், தலைமை அமைச்சர். (வாசுகியும் தோழியும் செடி கொடிகளிலி ருந்து பூப்பறித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இருக்கும்.மாதவிப்பந்தல் அடுத்த பளிங்கு மேடையில் தலைமை அமைச்சர் வந்து அமருகிருர்) தோழி (கலகலவென நகைத்து) வாசுகி: நீ உண்மையாகவா மலர் கொய்கிருய்? இக்லகளையெல்லாம் பறித்துக்கொண்டி ருக்கிருயே! (யோசனையில் ஆழ்ந்து மெய் மறந்திருந்த வாசுகி திடுக்கிட்டு தன் கைகளில் இருந்த இல்களை அவசர அவசரமாகக் கீழே போடு கிருள்.) :