பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ப. த . அரசாங்க நிர்வாக விஷயத்தில் மட்டுமல்லாமல் அமர்க்கள முறைபற்றிக் கூட அவன் தலையிட்டு இராஜதந் திரத்தில் தேர்ந்தவன் போல யோசனை சொல்லத் தொடங்கிவிடுகிறனே! து. அ : அரசியல் சாத்திரத்தையே கரைத்துக் குடித்துவிட்ட தாக அவனுக்கு நினேப்பு. பு : தான் பிரகஸ்பதியின் மறு அவதாரம் என்று அவன் எண்ணிக்கொண்டு இருக்கிருன் என்று சொல்லுங்கள். (வள்ளுவர் இவர்களின் உரையாடல்க் கேட்டு வேதனைப்படுகிருர், பிறர் பேசு வதை ஒற்றுக் கேட்பது உசிதமல்ல என்று எண்ணி அவர் அவ்விடத்தை விட்டு அகல முயலுகிருர் ஆளுல், படைத்தலேவன் தொடர்ந்து பேசத்தொடங்கிய பேச்சு அவரை அப்படியே நிறுத்திவிடுகிறது.) ப. த . இந்நிலைமையை இப்படியே வளரவிட்டுக் கொண்டு போகக் கூடாது. இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும். து. அ : இவனுக்கும் ஒரு முடிவு கட்டி விடவேண்டும். முதலில் அதற்கு ஒரு வழி செய்யுங்கள். பு: அது அவ்வளவு எளிதல்லவே! அமைச்சர் ஐயா! அரசர் தலைமை அமைச்சர் மட்டுமல்லாமல் ஐம்பேராயத்தார்கள் முதலியோருமல்லவா அவன்மீது தங்கள் உயிரையே வைத்திருக்கிருர்கள்? அவனுக்கு ஒன்று ஏற்பட்ட தென்ருல் அதற்குக் காரணமானவர்களை அவர்கள் எளி தில் விட்டுவிட மாட்டார்களே! ப. த . அதையும்தான் பார்த்து விடுவோமே! என் வாள் முனையின் முன் எப்பேர்ப்பட்டவர்களும் மண்டியிட்டே ஆக வேண்டும். நீங்கள் என்னவோ தொடை நடுங்கு கிறீர்களே? புலவரய்யா!