பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வன் : உங்கள் வீரப்பராக்கிரமத்தை விளம்பரப்படுத்தி வாட் போர் நடத்துவது இருக்கட்டும், ஐயா! முதலில் நீங்கள் யார்? எதற்காக என்னே வழி மறித்து வஞ்சகமாகத் தாக்கு கிறீர்கள்? நான் எந்த வகையில் உங்களுக்கு விரோதி யானேன்? எனக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து நான் யாருக்கும் ஒரு தீங்குஞ் செய்ததில்லையே? ஒருவரையும் பகைவராகக் கருதியதில்லேயே? அப்படியிருக்க...... ப, த, : இந்த வாய் வேதாந்தம் உம்மை இந்த ஆபத்தி லிருந்து தப்பிக்க உதவாது. நாங்கள் இதனுலெல்லாம் ஏமாற மாட்டோம். எங்கள் வாட்கள் தாம் உம்மிடம் பேசுமே யொழிய வாய் எதுவும் பேசாது. வள்: அப்படியா? சரி. வாட்களே பேசட்டும். (படைத் தல்வன் சுற்றிச் சுற்றி வந்து வள்ளுவரைத் தாக்குகிருன். அவனுடன் வீரர்களும் சேர்ந்து கொள்கின்றனர். வள்ளு வர் வீராவேசத்துடன் போராடி இவர் களுடைய எதிர்ப்பைத் தகர்த்து விடுகிரு.ர். வீரர்கள் படுகாயங்களுடன் பயந்து ஒடு கின்றனர். படைத் தலைவனும் முட்டியிலும் தோளிலும் காயமுற்றுத் திணறுகிருன். வள்ளுவர் இவன் தரித்திருந்த முக மூடி யைக் கிழித்து எறிகிருர். தன்னே இன்னுர் என அறிவதற்குள் அவன் சாமர்த்தியமாகத் தப்பியோடுகிருன்.) வன்; வஞ்சகம் வெட்கியோடுகிறதோ. (வாகன உறையிலிட்டுச் செல்கிருர்)