பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 காட்சி-15 காலம் : இரவு இடம் : தலேமை அமைச்சர் மாளிகை உறுப்பினர்: வள்ளுவர், வாசுகி, தலைமை அமைச்சர். த. அ : என்னிடங் கூடச் சொல்லாமல் ஏன் இராயசேகரர் பதவியிலிருந்து திடீரென விலகி விட்டீர்கள்? மாப்பிள்ளே! வள் : சொந்த ஊருக்குப் போய் அங்கு வாழ்க்கை நடத்த வேண்டும் என்று ஆசையுண்டாகிவிட்டது, மாமா! த. அ. இங்கும் நீங்கள் தனிக்குடித்தனம் தானே நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். நாங்கள் கேட்டுக் கொண்டபடி எங்கள் மாளிகையில் கூட நீங்கள் இருவரும் வாசம்செய்து கொண்டிருக்க வில்லையே! நீங்கள் சலிப்படைவதற்குக் காரணம் எதுவுமில்லையே! வள் : பொதுவாக, எனக்கு அரண்மனை வாசம் அலுத்துப் போய் விட்டது, மாமா! அது கட்டோடு பிடிக்கவில்லே. த. அ. . நீங்கள் பேசும் தோரணையைப் பார்த்தால், உங்க ளுடைய இந்த மனமாற்றத்திற்கு ஏதோ முக்கிய காரணம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது, மாப்பிள்ளே! வள் : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, மாமா! த அ (சிந்தனையோடு) அரண்மனையில் இருப்பவர்கள் ஏதாயினும் சொன் ஞர்களா? வள் : அப்படி...... (மேலே பேசாமல் தயங்குகிருர்.) வாசுகி : (குறுக்கிட்டு) நீங்கள் கூறுவது போலத்தாள் கும் தோன்றுகிறது. அப்பா! யாரோ ஏதோ பற்றிப் பேசியிருக்க வேண்டும். வள் : நீ ஒன்று வாசுகிய-அதெல்லாம் ஒன்றுமில்ல,