பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 உழைக்க நான் முதலில் விரும்பினேன். ஆனால், அதற்கு நிலத்தையும், ஏர் கலப்பைகளேயும், கால் நடைகளேயும் தேட வேண்டும். அதைவிட, எளிதாகச் செய்யக்கூடிய வேலை நெசவுத் தொழில். இது தூய்மையானதுங்கூட. இதை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறேன். வாசுகி யும் எனக்குத் துணேயாக இருப்பாள் என்று நம்புகிறேன். வா : ஒ! நான் ராட்டையைச் சுழற்றி நெசவுக்கு வேண்டிய நூல்களே நூற்றுக் கொடுப்பேன். நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலுமே நான் உதவியாக இருப்பேன்; நாதா! த. அ : (வியப்புடன்) என்னம்மா! மாப்பிள்ளைதான் விரக்தி யால் ஏதோ சொல்லுகிருர் என்ருல், நீ கூட இவருக்கு ஒத்தாற்போல், ஏதேதோ சொல்லத் தொடங்கி விட்டாயே! வன : கணவன் காட்டும் வழியில்தானே மனேவி நடக்கவேண் டும். அப்பா மாப்பிள்ளையின் குணத்தை நீங்கள் நன் கறிந்து தானே வைத்திருக்கிறீர்கள்? அவர் ஒரு விஷ. யத்தை தீரயோசித்து ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டா ரானல் பின் அதை யார் என்ன சொன்னுலும் மாற்றிக் கொள்ளவே மாட்டார். தயவு செய்து நீங்கள் அவரை அவர் விருப்பப்படி போக விடுங்கள். த. அ : (பெருமூச்செறிந்தவாறு) நீங்கள் இருவரும் ஒரு முடி வுக்கு வந்து விட்டீர்கள். இனி நான் என்ன சொன்னலும் அதல்ை ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. உங்கள் விருப்பம் போல்...... . . . வன : வருத்தம் கொள்ளாதீர்கள், அப்பா! வள் : என்னை மன்னித்து விடுங்கள், மாமா! உங்கள் விருப் பத்தை மீறி நடக்க வேண்டிய அவசியமும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டு விட்டது. எங்களை உளமார வாழ்த்தி அனுப் புங்கள்.