பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 வள் : தறிபோட்டு நெசவு செய்து சேலே, வேட்டிகளே அறுத் ததும் உங்களிடமே அவற்றைக் கொடுத்து விடுகிறேன். ஒரு வில் போட்டு நீங்கள் நூல் கண்டுக்கு உரியதை எடுத்துக் கொண்டு மீதி பணத்தைக் கொடுங்கள். ஏ : சி : மிக்க மகிழ்ச்சி. அது போதும் எனக்கு. உங்களை ஆயிரத்துக்கும் நம்புவேன். வள் : நன்றி, ஐயா! நாளேக்கு வந்து எனக்குத் தேவையான நூல் கண்டுகளே வாங்கிச் செல்வேன். ஏ : சி . ஏன் இன்றைக்கே வேண்டுமானலும் வாங்கிக் கொண்டு போகலாம். வள் : இருக்கட்டும், ஐயா! இன்று உங்களை அறிமுகப்படுத் திக் கொண்டு போகத்தான் வந்தேன். நான் அடுத்த வீதியில்தான் இருக்கிறேன். விடை பெற்றுக் கொள் கிறேன். வணக்கம். (ஏலேல சிங்கரும் வணக்கம் செலுத்திய வாறு எழுந்து நின்று வழி அனுப்பி வைக் கிருர்.) காட்சி-18 காலம் : முற்பகல் இடம் : வள்ளுவர் இல்லம் உறுப்பினர் : வள்ளுவர், வாசுகி. |வாசுகி அரிசியைப் பொறுக்கிக் கொண் டிருக்கிருள். வள்ளுவர் வெளியிலிருந்து வருகிருர்.) வள் : வாசுகி வாசுகி! - - வா (நிமிர்ந்து பார்த்து) வாருங்கள். 5