பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 (செம்பை எடுத்து அவர் கையில் கொடுக் கிருள். வள்ளுவர் மேல்துண்டை எடுத்து கொடியில் போட்டுவிட்டுக் கைகால்களை அலம்பிக் கொண்டு வருகிரு.ர்.) வன் : (துண்டினுல் முகத்தைத் துடைத்து கொண்டே) நான் வரும் வழியில் ஒரு காட்சியைப் பார்த்தேன். ஆடவன் ஒருவன் தாய் வீட்டிலிருக்கும் மனேவியைத் தன்னுடன் வருமாறு கூப்பிடுகிருன் அவளோ நான் இங்கு வந்து நாலேந்து நாட்கள்கூட ஆகவில்லை. இதற்குள் வந்து கூப்பிடுகிறீர்களே. இன்னும் ஒரு வாராமாகிலும் இருந்து விட்டுத்தான் வருவேன் என்து அடம் பிடிக்கிருள். அக்கம் பக்கத்தார் கூட்டம் கூடி அவர்களேச் சமாதானம் செய்யும் அளவுக்கு கணவன் மனேவி தகராறு ஏற்பட்டுவிட்டது. இப்படி ஒருவேளே சோற்றுக்கே வக்கற்ற தியிைல் இருக் கும் ஏழைப் பெண்களே தாய் வீட்டுப் பாசத்தை மறக்க மாட்டேன் என்கிருக்களென்ருல் ராஜயோகத்தில் இருந்து வாழ்ந்து வந்த உனக்குப் பெற்ருேரைப் பிரிந்து வந்து பல நாளாகியும் இன்னும் ஒரு முறைகூட திரும்பிப்போய்ப் பார்க்காமல் இருப்பது எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். எனக்கு ஒரே கழிவிரக்கமாய் விட்டது. அதல்ைதான், நீ தலைகுனிந்து சிந்தனையில் இருப்பதைப் பார்த்ததும் உனக்குப் பெற்றேரின் ஞாபகம் வந்திருக்கும் என்று எண்ணினேன். |வாசுகி கூடத்தில் மணயை எடுத்துப் போட்டு உண்கலத்தை அதன் முன் வைத்து முதலில் குவளையில் தண்ணிரை யும் பின் சோறு கறிகளையும் வைக்கிருள்.) வள் : (மனேயில் வந்து அமர்ந்தவாறே) வாசுகி! உனக்குப் பெற்ருேரைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந் தால் சொல். நான் அழைத்துக் கொண்டு போகிறேன். £oss 3 இப்போது அதற்கென்னங்க அவசரம்? இன்னும் நம் குடித்தனம் சரியாக அமையவில்லை. நம் நெசவுத்தொழில்