பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருஷ்ணன் தாலாட்டு

சீரான கண்ணிகளைத் திருமால்மேல் செப்புதற்குக் காரான கரிமுகனும் கலைமகளும் காப்பாமே; அன்றமரர்க் காக அயோத்தியெனும் பட்டணத்தில் சென்று அவதரித்த சீராளா, கண்வளராய்; எத்திலிளங் கோபியரை ஏமாற்றி வெண்ணெயுண்டு மத்திலடி பட்டதொரு மாதவனே, கண்வளராய்; வாதனேகள் செய்யஎண்ணி வஞ்சகமாய் வந்த அந்தப் பூதனையின் உயிர்குடித்த புண்ணியனே, கண்வள ராய், துஷ்டர்பலர் சபைதனிலே துரோபதையைப்

துகிலுரிய - இஷ்டமுடன் துகிலளித்த இன்னமுதே

கணவள ராய; வில்விதுரன் தன்னுடைய வில்எடுக்க ஒட்டாமல் நல்விதுரன் தன்மனேயில் நடப்பித்தாய், கண்வளராய். பஞ்சவர்க்குக் கர்ணன் பந்துமுறை கூருமல் வெஞ்சமரை விளைவித்த வஞ்சகனே, கண்வளராய். கடும்பாம்புக் கொடியுடைய காவலன்பால் தூது

சென்று கொடும்போரை மூட்டுவித்த கொடியோனே,

கண்வளராய்; போர்வளரும் படுகளத்தில் போர்வெறுத்த

அர்ஜுனர்க்குச் சீர்வளரும் நீதிகளைச் செப்பினுய், கண்வள ராய். வஞ்சனேயி ல்ைசிசுவை வாளுக்கு விருந்தளித்து நஞ்சனேய கஞ்சனுக்கு யமனைய் கண்வளராய்!