பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவத்தியானம்

திங்கள் அணிந்த முடியும் சடையும் தேடிய பிரமாவும் காணுத் திருமுடியும் நீறிட்ட நெற்றியும் நீண்ட புருவமும் கிமிஷத்தில் மன்மதனே எதிர்த்ததோர் நெற்றியில் கண்ணழகும் மீண்டு உருண்டு கூர்மையாகி யோகியர் உள்குமணி காசியழகும் கடைகழன்ற மேல்முழியும் கபோல நயனமும் பூரண சந்திரன் போல முகமும் தாமரை போலக் கபோலமும் ஆணிமுத் துப்போலத் தந்தமும் தாழம்பூ இதழ்போலே அதரமும் கனக மணிக்குண் டலம்இலங்கக் கர்ண வஜ்ரம் வைடுர்யம் மரகதம் பச்சை இழைத்ததோர் மகுடமும் அந்தமாய் விளங்கும் முகதேஜஸ் காந்தியாலும் சிருஷ்டி ஸ்திதிலம் ஹாரம் ப்ண்னும் செய்கையாலும் இன்னும் கம்பீரப் பார்வையாலும் கண்டேன் நான் என்னிடத்தே ஆதி யங் தமற்ற சங்கரரை; கண்டவுடனே சிவனேக் கருதியே ஐகம்மறந்தேன்; அண்டியதோர் ஆனந்தத்தில் அடிபணிந்தேன்; இன்மயமான சதாசிவரைப் பூஜை பண்ணி எங்கும் தன்மய மென்னும் ததாகாரம் ஆகிவிட்டேன்;

சிவலோகம், சிவலோகம், தரிச்சதொரு காலகூடம் சங்குவரிக் கழுத்திலே

நவரத்ன பூஷணம் விளங்கும் திருமார்பில் ஆனத் துதிக்கைபோல் உருண்டு திரண்ட ஆஜாது பாகுவும்