பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலாம்பிகை துதி

(பல்லவி)

அம்பாகமா லாம்பா, ஆதிபரா சக்தி, ஆரூர் தனில்விளங்கும் ஐய னுடைய பாரி.

(சரணங்கள்)

அஞ்சிவந்த பேரை ஆதரிப் பாயே;

ஆதி பராசக்தி, ஜோதிஸ்வ ரூபி, சஞ்சலம் தீர்த்தருள் தயாபரி யானவளே,

சாமள வர்ணருக்கு ப்ரேம சகோதரி (அம்பா)

காலனே உதைத்திட்ட கணவனே மாலேயிடக் கடுந்தவசில் இருப்பாள், கமலாம்பா, கல்யாணி, பாதச் சிலம்புபார்க்கப் பத்துலட்சம் கண்வேனும் பண்ணும் தவசையோ சொல்லி முடியாது. (அம்பா)

திங்கள் தனேஅணிந்த செஞ்சடை நாதனை

வஞ்சி மகிழ்ந்தவள் பொங்கிப்பூ ரித்துகின்ருள்:

வானேர் புகழும்பரன் வாமபாக தேவி வந்துதித்தாள் சந்த்ர பிம்பம்போல் ஆண்டிக்கு.

. (அம்மா)

(ப-ம)" ஐயனுக்கு.