பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதி கதவு திறக்கும் பாட்டு

ஈசுவரரும் பார்வதியும் நேசத்துட னே அதி

சிநேகமாய் இருந்தார்கள்.

ஜோதிமய சுந்தரியே, தோகைமயி லே,இப்போ

சொர்ணக் கதவைத் திறடி மானே!

அர்த்தஜாமம் கழிந்தபின் அற்புதப் பொற்கதவைத்

திறவென்று சொன்னது யாரோ?

மலேயராஜன்குமாரி, மங்கையே, மாது,நான் சங்கரன்தானடி மானே,-சொர்ணக் கதவைத் திறவடி, தேனே!

விந்தை யுடன்கடந்து சங்கரி பொற்கதவைச்

சிக்கெனத் தான் திறந்தாள், மாது:-சொர்ணச் சங்கிலி திறந்தாளப் போது.

அஞ்சன விழியாளே, ஆயாச மாகவந்தேன்;

வெண்சாமரை வீசடி, மானே,-கந்த பரிமளங்கள் பூசடி, தேனே!

அறுகு சிரசில்வைத்து விபூதி அணிந்தோர்க்குப் பரிமள கந்தம்ஏ து சுவாமி?-அதைப் (பாவையர் யார்கொடுத்தார் சுவாமி?)

அர்ஜுனன் பூஜைசெய்தான்; அளவற்ற கந்தபுஷ்பம்

வாசனை வீசுதடி மானே;-கந்த - பரிமளம் வீசுதடி தேனே!