பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தாள ஆயி

வெள்ளிமுக்காலி மேல்இருந்து-ராஜாத்தி வெந்நீர் வெச்சுத் தலைமுழுகி வேர்த்து வாருளாம் முத்தாள ஆயிக்கு வெள்ளிக் குஞ்சம்வச்சு வீசுங்கடி.

தங்கமுக்காலி மேல்இருந்து-ராஜாத்தி தைலம் தேச்சுத் தலைமுழுகித் தவிச்சு வாருளாம்; முத்தாள ஆயிக்குத் - தங்கக் குஞ்சம்வச்சு வீசுங்கடி.

வீதியை வீதியைக் கூட்டுங்கடி:-நல்ல வெத்தலேத் தோரணம் கட்டுங்கடி, படர்ந்த வெத்தலையை மடிச்சுப் போடுவா, பாண்டியன் தங்கச்சி முத்தாள ஆயி.