பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சுந்தர சண்முகனார் "ஆமாம். கட்டணம் செலுத்தி உணவுச்சீட்டு வாங்கு வதற்காகப் பணப்பையை எடுக்கப்போனபோது திருட்டுப் போனது தெரிய வந்தது. இங்கே தேடலாம் என்று வந்தேன் - இங்கேயும் கிடைக்கவில்லை. சரி, போனால் போகிறது - என்ன செய்வது!" 'அப்படியானால் நீங்களும் என்னுடன் சாப்பிடுங்கள். என் பாட்டி நிறைய உணவு வைத்திருக்கிறாள். முழுவதும் என்னால் சாப்பிட முடியாது. இது நம் இருவருக்கும் போதுமானது' ‘'வேண்டாம் வேண்டாம் - எனக்கு அவ்வளவாகப் பசியில்லை. நீங்கள் சாப்பிடுங்கள்' 'நீங்கள் கூச்சப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதற்குக் காரணமே இல்லை. நாம் இருவரும் ஒரு படிப்புப் படித்தவர்கள்-ஒரே வேலை பார்க்கத் தகுதி உடையவர்கள். நான் பெண்ணாயில்லாமல் உங்களைப் போலவே ஆணா யிருந்தால் நீங்கள் என்னுடன் நட்பு கொண்டு சாப்பிடுவீர்கள் அல்லவா? அவ்வாறே என்னை ஒரு நண்பன் எனக்கொண்டு சாப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்புறம் உங்கள் விருப்பம்! மேற்கொண்டு உங்களை வற்புறுத்த நான் விரும்பவில்லை." சரி கொஞ்சமாகக் கொடுங்கள்.' உணவு முடிந்தது. பேச்சுத் தொடர்ந்தது. அறவணன் அன்றிலைக் கேட்டார்: 'நீங்கள் எந்த ஊரில் எம்.ஏ. படித்தீர்கள்?’’ 'சென்னையில் எங்கள் பாட்டி வீடு இருப்பதால் அங்கே தங்கி, சென்னைக் கல்லூரியில் படித்தேன்.' 'நீங்கள் எந்த ஊரில்...?"