பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 41 'நான் மதுரையில் படித்தேன். நீங்கள் இப்போது எந்தக் கல்லூரியிலாவது வேலை பார்க்கிறீர்களா?' "ஊம்-திருச்சியில் வேலை பார்க்கிறேன். நீங்கள் , ' 'நான் காரைக்குடியில் வேலை பார்த்துக்கொண்டிருக் கிறேன். நேற்றுச் சென்னைக் கல்லூரிக்குச் சென்று வந்தோமே - அந்த வேலை உங்களுக்குக் கிடைக்கலாமென்று நம்புகிறீர்களா?' 'அது எனக்குக் கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? உங்களுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம்.' இல்லை; உங்களுக்குக் கிடைக்கலாம் என்றே எண்ணுகிறேன்.' யாருக்குக் கிடைக்கிறதோ - பொறுத்திருந்து பார்ப்போமே!’’ இப்படியாகச் சிறிது நேரம் பேச்சு நிகழும். பின்னர் நெடுநேரம் பேச்சின்றி அமைதி நிலவும். மீண்டும் சிறிது நேரம் பேச்சு கிளைக்கும். பிற்பகல் 4.28 மணிக்கு வண்டி விழுப்புரம் சந்திப்பில் வந்து நின்றது. சிற்றுண்டி - தேநீர் அருந்த வேண்டிய நேரமும் இது-இடமும் இது. அங்கே வண்டி இருபத்திரண்டு நிமைய நேரம் நிற்கும். ஆதலால், இதைவிட்டால் வேறு வாய்ப்பில்லை. நண்பகல் பன்னிரண்டரை மணிக்குச் செங்கல்பட்டில் சாப்பிட வேண்டுமென்று இறக்கை கட்டிப் பறந்த அறவணன், இப்போது சிற்றுண்டி அருந்தவேண்டு மென்ற உணர்வேயில்லாமல் அசைவற்றுக் காணப்பட்டார். அவருக்குத்தான் இறக்கை ஒடிந்துவிட்டதே - பணம் களவு போய்விட்டதே. எப்படி சிற்றுண்டி சாப்பிடுவது? செங்கல் பட்டில் ஒருவர் உணவை இருவர் பகிர்ந்து கொண்டதால் பசியும் கடுமையாக வேலை செய்கிறது. என்ன செய்வது?