பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சுந்தர சண்முகனார் எதிரேயிருந்த சிற்றுண்டிக் கடையில் சிலர் உண்டு கொண்டிருந்ததை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி, உண்மையாகவே பசி உணர்வு கொண்டிருந்த அன்றில் கூறினாள்: 'இங்கே சிற்றுண்டி அருந்தி விடலாமே! இதை விட்டால், வேறு இடமோ - நேரமோ இல்லையே!' 'நீங்கள் சாப்பிடுங்கள்! எனக்குப் பசியில்லை. அதோடு, இடைவேளையில் சிற்றுண்டியருந்தும் வழக்கமும் எனக் கில்லை. எனவே நீங்கள் போய்ச் சாப்பிட்டுவிட்டு வரலாம்'. 'ஏன், நீங்களும் சாப்பிடலாமே?” 'இல்லையில்லை; எனக்கு வேண்டாம். நீங்கள் சீக்கிரம் போய்ச் சாப்பிடுங்கள்'. 'கடையில் இருக்கும் கும்பலையும் பரபரப்பையும் பார்த்தால் என்னால் போய்ச் சாப்பிட முடியாதுபோல் தத் τα" தெரிகிறது. அதனால் எனக்கும் ஒன்றும் வேண்டாம்'. அப்படியானால் நீங்கள் இறங்கிப் போக வேண்டிய தில்லை. உங்களுக்கு நான் வாங்கி வந்து தருகிறேன்'. 'அப்படியே செய்யுங்கள்'. 'உங்களுக்கு என்னென்ன வாங்கிவர வேண்டும்'. 'எனக்குப் பசியும் தாகமும் அதிகமாயிருப்பதால், இரண்டு இனிப்பு, இரண்டு வடை, இரண்டு உப்புமா, இரண்டு அளவு தேநீர் வாங்கிக்கொண்டு வாருங்கள்' என்று சொல்லி அன்றில் அறவணனிடம் பணம் கொடுத்தாள். அவர் அவற்றை வாங்கிவந்து அவளிடம் கொடுத்து விட்டு அமர்ந்து கொண்டார். இரண்டிரண்டு வாங்கி வரச் சொன்ன போதே. தனக்கு ஒவ்வொன்று தந்து உண்ணும்படி வற்புறுத்துவாள் என்று அறவன்ை புரிந்து