பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வீகத் திருமணம் 43 கொண்டார். அவ்வாறே நடந்தது. அவரால் மறுக்க முடியவில்லை. மறுத்தால், மதிப்பு அறியாதவன் என்றும் ஒரு காட்டுப் பூச்சி என்றும் தன்னை அவள் நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? அன்றில் எப்போதும் பயணம் செய்யும்போது இடை வழியில் இடைவேளையில் சிற்றுண்டி யருந்தும் வழக்கம் வைத்துக் கொள்வதில்லை என்பதும். தன்னிடம் பணம் இல்லாமையை அறிந்து இரக்கப்பட்டுத் தனக்காகவே அவள் இப்போது சிற்றுண்டி அரங்கம் (பலகாரக் கச்சேரி) நடத்தினாள் என்பதும் அறவணனுக்கு எப்படித் தெரியும்?. சிற்றுண்டி விருந்து சிறப்பாக நடந்தேறியது. நண் பகலில் உணவு பற்றாக்குறையால் துண்டு விழுந்த இடத்தை இப்போது இனிப்பும் காரமும் தேநீரும் நிரப்பிவிட்டன. அறவணனுக்கு வயிறு நிறைந்தும், இப்படி ஒரு நிலைமை நேர்ந்தது குறித்து மனம் நிறையவில்லை; இதற்கு முன் பழகியறியாத ஒரு புதுப்பெண்ணிடம் உணவு பெற்று உண்ண வேண்டி வந்ததே என உள்ளுக்குள் புழுங்கிப் பொருமினார். அந்த உள்ளத்தின் புழுக்கத்தை அவரது முகத்தைக் கொண்டு குறிப்பாய் - நுட்பமாய்ப் புரிந்து கொண்ட அன்றில், தன் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பினாலும், குவளைக் கண்களின் குறுகுறு பார்வை யாலும், குனித்த புருவங்களின் கோணல்மாணல்களாலும், மலர்ந்த முகத்தின் மகிழொளியாலும் அறவணனுக்கு ஆறுதல் அளித்தாள். - வண்டி விழுப்புரத்தைக் கடந்து ஒடிக்கொண்டிருந்தது. அன்றிலின் எண்ணமெல்லாம் அடுத்து அறவணனுக்கு ஆக வேண்டியதைக் கவனிப்பதிலேயே இருந்தது. அவர்மேல் அவளுக்குக் காதலோ - கனிவோ இருப்பதாக எவரும் சொல்லாவிடினும், இரண்டு பெண்களுக்கிடையே - அல்லது