பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சுந்தர சண்முகனார் இரண்டு ஆண்களுக்கிடையே இருப்பது போன்ற ஒருவகை நட்புணர்வு அவளிடம் காணப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. 'நம்மைப் போலவே அவரும் படித்தவர் - நம்மைப் போலவே அவரும் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிகிறார். மூன்று நாளாக அறிமுகம் ஆகிவிட்டார். இருவரும் ஒரே வண்டியில் - ஒரே பெட்டியில் பயணஞ் செய்து, ஒரே கல்லூரிக்குச் சென்று, ஒரே வண்டியின் ஒரே பெட்டியில் திரும்பிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் அவர் பணப்பையைத் தொலைத்து விட்டார்; உணவுக்குக்கூட வழியில்லாது திண்டாடுகிறார். அவர் இரவு சாப்பிட்டாக வேண்டும்-திருச்சியில் தங்கி ஏதோ வேலையைக் கவனிக்க வேண்டும் - பின்பு பயணச்சீட்டு (டிக்கட்) எடுத்துக் கொண்டு காரைக்குடிக்குச் செல்ல வேண்டும்.இவ்வளவுக்கும் அவர் பணத்துக்கு எங்கே பேவார்? கூச்சப்பட்டவர்போல் தோன்றும் அவர் வாயைத் திறந்து யாரிடம் பணம் கேட்பார்: அவரை நாம்தான் கவனிக்க வேண்டும். பெண் களுக்கு இருக்கவேண்டும் என்று பெரியவர்கள் கூறியுள்ள அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவற்றை நாம் பார்த்துக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது. நம்மைப் பற்றி யார் என்ன எண்ணிக் கொண்டாலும் சரி . அல்லது அறவணனே நம்மைத் தவறாகப் புரிந்துகொண்டாலும் சரி - கவலையில்லை. மனிதருக்கு மனிதர் என்ற முறையில் - அதிலும் படித்த பெண்ணாகிய நாம் நமது கடமையைச் செய்தேயாக வேண்டும்' - என்றெல்லாம் அன்றில் எண்ணிக்கொண்டு வந்தாள். மாலை 6-23 மணிக்கு வண்டி விருத்தாசலம் சந்திப்பு வந்து சேர்ந்தது. அங்கே எட்டு நிமைய நேரம் நிற்கும். இந்த வண்டி இரவு 10-40 மணிக்குத் தான் திருச்சி சேரும் ஆதலாலும், இடையில் வேறு வசதியின்மையாலும், இரவு