பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

திருந்தாள். ஆகவே, மிக எளிதாக ஓசைப் படாமல் கதவை நகர்த்திக் கொண்டு அவன் உள்ளே நுழைந்தான். அமைதியாக, பின் நிகழ்வைப் பற்றிய எத்தகைய கவலையுமின்றி கண்மலர் மூடித் துயின்று கொண்டிருக்கும் அந்தப் பூங்கொடியைப் பார்த்தவுடனேயே அவன் ஊக்கமெல்லாம் பறந்துவிட்டது. அவளை விட்டுப் பிரிவது என்ற எண்ணமே வேதனை தருவதாக இருந்தது. அவளை எழுப்பி அவளிடம் விடைபெற்றுக் கொள்ளத் தக்க ஊக்கமும் உறுதியும் தனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த சித்தார்த்தன் அவளை எழுப்பாமலே சென்றுவிட முடிவு செய்தான்.

எழுப்ப வேண்டாம். அவள் கன்னத்திலாவது ஒரு முத்தம் இட்டுச் செல்லலாம் என்று எண்ணிக் குனிந்தான். ஆனால் முத்தமிடவில்லை. முத்தமிடும்போது அவள் விழித்துக் கொண்டால் என்ன செய்வதென்று நிமிர்ந்துவிட்டான்

அன்று பிறந்த தன் பிள்ளை ராகுலன், சின்னஞ் சிறிய மலர்போல் அழகாக யசோதரையின் மார்போடு ஒட்டிக் கொண்டு கிடப்பதைக் கண்டான் சித்தார்த்தன். ஒரு முறை தன் மகனைத் தூக்கி மார்பில் அணைத்து முத்த-