பக்கம்:தெய்வ மலர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

பாவம் என்று மறைத்து வைத்தால், நான் பிடித்த எல்லா மீன்களையும் திருட்டுத்தனமாகத் தின்றுவிட்டாயே! உனக்கு உதை நன்ருக வேண்டும் என்று மீன் பிடிப்பவனும் ஓங்கி ஒரு அடி

கொடுத்தான்.

"நீதான் நரியை மறைத்து வைத்தாயா! திருடனுக்கு உதவி செய்தால் என்ன தண்டனை தெரியுமா? என்று எல்லோரும் அவனை அடிக்க ஆரம்பித்தார்கள். ஐயா! நான் இனிமேல் இவ்வாறு தவறு செய்ய மாட்டேன். திருடனுக்கு உதவிசெய்ய மாட்டேன் என்று அழுதுகொண்டே சொன்னன். அவனுக்கும் நல்ல அடி.

"திருடுவது குற்றம். திருட்டுக்கு உதவி செய்வது மாபெரும் குற்றம்’ என்று ராமன் கூறின்ை. ஆமாம்” என்ருன் மீன் பிடிப்பவனும்.

நரியின் கால்களைக் கட்டி, நீண்ட குச்சியால் சேர்த்துத் துரக்கிக் கொண்டு போனர்கள். மீனுக்கு ஆசைப்பட்டு, மாட்டிக் கொண்டோமே என்று நரி அழுது கொண்டே இருந்தது.

'தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு’ என்று ராமன் கூறியதைக் கேட்டு, மாட்டிக் கொண்ட

நரி தலையை ஆட்டிக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/13&oldid=580286" இலிருந்து மீள்விக்கப்பட்டது