பக்கம்:தெய்வ மலர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

என்ன சொன் லுைம் அவர்கள் கேட்க மாட்டார் கள், எந்த சாமி மேல் சத்தியம் செய்தாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தன்னுடைய ஏழ்மை தான் அவர்களை அப்படி நினைக்கத் துரண்டுகிறது. தன்னுடைய நேர்மையை அவர்கள் நம்பாத பொழுது தான் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்தபடி வீட்டை விட்டு வெளியேறினுள்.

நேரே தன்குடிசை வீட்டுக்குச் சென்று இந்த திருட்டு நிகழ்ச்சியைத் தன் பெற்ருேரிடம் கூறவும் அவளுக்கு தைரியமில்லை. அதனல்தான், தான் எப் பொழுதும் உட்கார்ந்து ஒய்வெடுக்கின்ற கல்லின் மீது

போய் உட்கார்ந்து கொண்டாள். -

கன்னத்தில் கைவைத்தவாறு, என்ன செய்தால் தன்மேல் ஏற்பட்ட கெட்ட பெயர் போகும்? தங்க வளையல் எங்கே போயிருக்கும்? யார் வீட்டிற்குள் வந்திருப்பார்? எப்படி காணுமல் போயிருக்கும்?

இப்படியாக யோசனை செய்து கொண்டிருந்தாள் கலா. திடீரென்று கோழிக் குஞ்சுகள் அலறுகின்ற சத்தம். படபடவென்று இறக்கைகள் அடித்துக் கொள்ளும் சத்தம்,

கண்விழித்துப் பார்த்தாள் கலா. ஒரு சிறு கோழிக் குஞ்சினைக் காகம் தன் கால்களுக்கு இடையே வைத்துத் துக்கிப் பறப்பதைப் ட ார்த்தாள்.

என்ன நிளைத்தாளோ கலா! அவளுக்கு எட் படி அந்த வேகம் வந்ததோ! அவளுக்கே தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/41&oldid=580314" இலிருந்து மீள்விக்கப்பட்டது