பக்கம்:தெய்வ மலர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

பக்கத்தில் கிடந்த ஒரு கல்லை எடுத்து காக்கை வின்மேல் எறிந்தாள். அது யாருடைய அதிர்ஷ்டமோ. கல் சரியாக காக்கையின் தலை மீது பட்டது. அடி பட்ட காகம் தடுமாறிக் கீழே விழுந்தது.

உடனே தாய்க்கோழி பாய்ந்து சென்று காக்கை யின் தலையின் நறுக் நறுக்’ என்று நான்கு கொத்துகள் கொத்தின. காக்கை பரிதாபமாகக் கத்திக் கொண்டே சுருண்டு விழுந்தது.

தாய்க்கோழியைப் பார்த்தாள் கலா. அதன் சத்தத்தில் சந்தோஷம் தெரிந்தது. அதற்கு உதவி செய்ய தன்னுல் முடிந்ததை நினைத்து, அவள் தன் கவலையையும் மறந்து சந்தோஷப் பட்டாள்.

பிறருக்கு உதவி செய்யும்பொழுது தனக்குள்ள் கவலை திடீரென்று மறைந்து போனதை நினைவு படுத்திக் கொண்டாள். இனிமேல் பிறருக்கு உதவி செய்வது தான் தனது முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்றும் அவள் முடிவு செய்து கொண்டாள்"

இப்படி நினைத்துக் கொண்டிருந்த கலாவிடம் தாய்க்கோழி வந்தது. தன் குஞ்சினைக் காப்பாற்றித் தந்ததற்காக நன்றி கூறிக் கொண்டது.

"நான் என்ன செய்து விட்டேன். ஆத்திரத்தில் கல்லை எடுத்து வீசினேன். அதிர்ஷ்டவசமாக காக்கை மேல் பட்டு விட்டது. அவ்வளவுதான் என்ருள் கலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/42&oldid=580315" இலிருந்து மீள்விக்கப்பட்டது