பக்கம்:தெய்வ மலர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

நரி சொன்னதை எல்லா மிருகங்களும் சரி சரி என்றன. கிழட்டுச் சிங்கம் என்றதும் சிரி சிரி என்று எல்லாம் சிரித்தன,

"யார் ராஜா என்பதை முடிவு எடுப்பதற்காக கரடியார் வந்து தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி விட்டு நரி உட்கார்ந்து கொண்டது.

கரடி மேடையில் வந்து ஏறி நின்றது. மேடையைச் சுற்றி ஒரு பார்வையை வீசியது. கரடி கண்களில் படவேண்டும் என்பதற்காக, எல்லா மிருகங்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னுக்கு

வநதன.

"அவரவர் இடத்திலேயே இருங்கள்’ என்று கரடி கத்தியது. மிருகங்கள் முன்னேறி வராமல் சிரமப்பட்டு கீழேயே நின்றுகொண்டன. இப்பொழுது கரடி பேசத் தொடங்கியது. *

'நமக்கெல்லாம் ராஜாவாக ஒருவர் வர வேண்டும். யார் யார் ராஜாவாக வரவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ, அவர்களெல்லாம் மேடைக்கு வரலாம்’ என்று கரடி சொன்னதுதான் தாமதம்! எல்லா மிருகங்களுமே மேடையில் ஏறத் தொடங்கின.

இருப்பதோ சிறிய மேடை. எப்படி இடம் போதும்? ஒன்றையொன்று தள்ளிக் கொண்டு மேடை மீது நிற்பதற்காக எல்லாமே முயன்றன. அதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/54&oldid=580327" இலிருந்து மீள்விக்கப்பட்டது