பக்கம்:தெய்வ மலர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தெய்வமலர்

அழகான கோழிக்குஞ்சு அது. நல்ல மஞ்சள் நிறம் உடையது. குப்பை மேட்டில் தனியாக நின்று. குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தது.

ஏதாவது நெல்மணி கிடைத்தால். உடனே அதை கொத்தித் தின்னுமல், சுற்றுமுற்றும் பார்க்கும். கம்பீரமாகக் குரல் கொடுக்கும். பிறகு அந்த மணியை வெடுக்கென்று விழுங்கும்.

அந்தக் கோழிக்குஞ்சு அப்படி ஏன் பார்க்கிறது? யாரையோ அது எதிர்பார்க்கிறது! யாரை!

பல கோழிக் குஞ்சுகள் போடும் சத்தம் கே.பீ. கின்றனவே! இதோ பக்கத்தில் வந்தாகி விட்டது. கூடவே தாய்க் கோழியும் வருகிறது. அதன் இறக்கைக்குள்ளே புகுந்து கொண்டே எல்லா குஞ்சுகளும் வருகின்றன.

ஒன்றிரண்டு குஞ்சுகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு கீழே விழுகின்றன. பின்னர் எழுந்து கொண்டு, தாய்க்கோழி போகும் திசை பார்த்து ஒடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/58&oldid=580331" இலிருந்து மீள்விக்கப்பட்டது