பக்கம்:தெய்வ மலர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

மஞ்சள் நிறக் கோழிக்குஞ்சு விழுந்து விழுந்து சிரித்தது. இப்படியும் தாய் பைத்தியங்கள் இருக்க லாமா என்று கேலி பேசியது.

துார இருந்து தாய்க் கோழி மஞ்சள் குஞ்சினைக் கூப்பிட்டது. தனியாக நிற்கிருயே! ஓடிவந்து எங் களுடன் சேர்ந்து கொள்' என்று கூப்பிட்டது.

வசமாட்டேன்! வரமாட்டேன்! வரமாட்டேன் என்று மஞ்சள் குஞ்சு, அழுத்தந் திருத்தமாகக் கத்தியது. ஏன் வரமாட்டாய்? என்று தாய்க்கோழி கேட்டுக் கொண்டே அருகில் வந்தது.

உங்கள் கூட நான் சேர மாட்டேன். நான் தனி யாகவே இரை தேடிக் கொள்கி றேன்’ என்று குஞ்சு கூறியது.

  • உன் தாய் நகளிைருக்கிறேன். உன்னுடைய சகோதர சகோதரிகள் எல்லாம் என் இடவே தான் இருக்கின்றனர். நான் குப்பையைக் கிளறி விடு கிறேன். இரையைத் தேடித் தருகிறேன். எல்லாம் உண்டு மகிழ்கின்றன, நீயும் என் கூடவா என்று அழைத்தது.

அந்தக் குஞ்சுகளுக்ரு அறிவும் இல்லை. பலமும் இல்லை. குப்பையைக் கிளறவும் தெரியாது. இரையைக் கண்டுபிடிக்கவும் புரிய 'து. அதனுல் தான் உங்களை நம்பியே ஒடி வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/59&oldid=580332" இலிருந்து மீள்விக்கப்பட்டது