பக்கம்:தெய்வ மலர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

நன்ருக சேற்றில் புரண்டு விட்டது. எருமை, இப்பொழுது அதற்கு கர்வம் வந்து விட்டது. பட்டத்து யானை ராஜ வீதியில் வருவது போல தன்னை நினைத்துக் கொண்டது, எருமையைப் பார்த்து மற்றவர்கள் பயந்து ஒதுங்கிப் கொண்டதை பார்த்துத் தான் அதற்கு அந்த நினைப்பு வந்தது.

எதிரிலே ஒரு டீக்கடை. அங்கிருந்து ஒரு சினிமா பாட்டு காற்றிலே மிதந்து வந்தது. அதைக் கேட்டபடி, தலையை ஆட்டிக் கொண்டே, எருமை மாடு டீக்கடையை நோக்கி வந்தது,

என்ன ஆச்சரியம்! புல் கட்டு ஒன்று ரோடு ஒரத்திலே இருந்தது. அதைப் பார்த்ததும் அதைத் தின்று தீர்த்து விட வேண்டும் என்ற வேகம் வந்து விட்டது.

முதலில் நின்று கொண்டு தின்ன ஆரம்பித்த எருமை மாடு, பிறகு படுத்துக் கொண்டு தின்றது அப்பொழுது ஒரு லாரி வந்து நின்றது. அதன் பின் சக்கரத்தில் கல் ஒன்றை வைத்து விட்டு டீ குடிக்கச் சென் ருர்கள் லாரியில் உள்ளவர்கள்.

அவர்களை ஒரு விரட்டு விரட்ட வேண்டும் என்று எருமை நினைத்துக் கொண்டிே. புல்லினை வேகமாகத் தின்று கொண்டிருந்தது.

ஐயையோ! பாழாய் போன எருமைமாடு என் புல் கட்டைத் தின்று விகி.உதே! இனிமேல் எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/70&oldid=580343" இலிருந்து மீள்விக்கப்பட்டது