பக்கம்:தெய்வ மலர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

புல்லை விற்பேன்! என் குடும்பம் இன்றைக்குப் பட்டினி தான் என்று ஒரு பெண் ஓடி வந்தாள். அதை விரட்ட கையை ஓங்கிள்ை.

எருமை மாடு படுத்துக் கொண்டிே தன் வாலை சுழற்றி அடித்தது. ஒரு துளி சேறு அவள் கண்ணில் பட்டுவிடவே, அவளுக்குக் கோபம். அதை அடிக்க வேண்டும் என்ற வெறி. பக்கத்தில் கல் எதுவும் கிடைக்கவில்லை.

லாரியின் சக்கரத்திற்குத் தடையாக வைத் திருந்த அந்த கல்லை எடுத்து ஓங்கி அடித்தாள் உன் அடி என்ன செய்யும் என்பது போல, கொம்பை ஆட்டிவிட்டு எருமை, மீண்டும் புல்லை ருசித்துத் தின்றுகொண்டிருந்தது.

நிம் மதியாக படுத்துக் கொண்டு, காலை நீட்டி விட்டவாறு தின்றுகொண்டிருந்த எருமை மாட்டுக்குப் பகீர் என்றது. ஆமாம்! லாரியானது பின்புறமாக வந்துகொண்டிருந்தது. எழுந்து ஓடி விடலாம் என்ருல், எருமையால் எழுந்திருக்க முடியவில்லை.

தரையெல்லாம் சேருக இருந்ததால் வழுக்கல் வேறு . அம்மா என்று ஒரு கத்தல். எருமைக்கு அந்த சத்தம் மட்டுமே காதில் கேட்டது. கன்றுக் குட்டி போட்ட சத்தம்தான் அது.

பின்னங்கால்கள் இரண்டின் மேலே லாரியின் பின் சக்கரங்கள் ஏறி அசைத்து அப்படியே நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/71&oldid=580344" இலிருந்து மீள்விக்கப்பட்டது