பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 என்ற ரோம் நாட்டு சக்கரவர்த்தி. தடைசெய்து நிறுத்திய ண்டு கி.மு.394ம் ஆண்டு. அதே கிரேக்க மண்ணில், ஏதென்ஸ் நகரத்தில் புதிய ஒலிம்பிக் பந்தயத்தைத் தோற்றுவித்து நடத்திப் புகழ் பெற்றவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பியரி கூபர்ட்டின் பிரபு. புதிய ஒலிம்பிக் பந்தயம் தொடங்கிய ஆண்டு 1896 ஏப்ரல் மாதம் 6ம் நாளாகும். 80) வளைகோல் பந்தாட்டத்தில் (Hockey) மிகச் சிறந்த ஆட்டக்காரர் என்று உலகம் போற்றிப் புகழும் பெருமை பெற்ற தயான்சந்த் என்பவர், முதன் முதலில் இந்தியாவின் பிரதிநிதியாக விளையாடச் சென்றபோது ராணுவத்தில் லான்சி நாயக்காக இருந்தார். அவர் சிறப்பாக ஆடியது கண்டு படிப்படியாக உயர்வுகள் பெற்று, மேஜர் என்ற பதவியில் அமர்த்தப் பட்டார். உண்மை உழைப்பு உயர்வினைத்தரும் என்பதற்கு சான்றாகத் திகழ்கிறார் மேஜர் தயான் சந்த் அவர்கள்.

31) மேசைப் பந்தாட்டத்தில், மட்டையினால் அடிப் பட்டுப் போகும் பந்தின் வேகமானது மணிக்கு 60 மைல் என்று கண்டறிந்திருக்கின்றார்கள். அவ்வளவு விரைவாக பந்தடிக்கும் வீரர் சுவாங் டிசி டங் ( Chuang Tse Tung) என்பவர். இவர் 1961, 1963, 1945 ஆகிய மூன்று ஆண்டு களில் உலக மேசைப்பந்தாட்ட வீரராக வெற்றி பெற்றவரா வார்.