பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

17 82) பூப்பந்தாட்டத்தில் அர்ஜுனா விருது பெற்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த கரீம், கர்னாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயம்மா 39) கால்பந்தாட்டத்தில் உள்ள இலக்குப்பகுதியில் (God) குறுக்குக் கம்பத்தை (Cross Bar) 1875ம் ஆண்டு தான் முதன் முதலாகப் பயன்படுத்தினார்கள். அதற்கு முன் நாடாக்கள் (Tapes) தான் குறுக்குக் கம்பமாகப் பயன் பட்டிருக்கின்றன.

34) கிரேக்கத்தில் நடைபெற்ற பழைய ஒலிம்பிக் பந்த யங்களைத் தடை செய்து நிறுத்தி அழித்தவர், ரோம் நாட்டை ஆண்ட முதலாம் தியோடசிஸ் என்னும் சக்ரவர்த்தி. தடை செய்த ஆண்டு கி.பி. 394. அவ்வாறு தடை செய்யுமாறு அறிவுரை தந்தவர் செயின்ட் அன்புரோஸ் எனும் பாதிரியார் ஆவார். 35) கிரிக்கெட் ஆட்டத்தில் Hat Trick என்றொரு சொல் உண்டு. அதற்கு அந்தப் பெயர் ஏன் வந்தது என்றால். தொடர்ந்தாற் போல் பந்தெறிந்து (Bowling) மூன்று விக் கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தால், அதற்குப் பரிசாக, தொப்பியைப் (Hat) பரிசாக அளித்தனர். அதனால் தான் அந்த சாதனைக்கு Hat trick என்ற பெயர் வந்தது. முதன் முதலாக இவ்வாறு பரிசு கொடுத்த ஆண்டு 1858 என்று வரலாற்றுக் குறிப்பு ஒன்று கூறுகிறது.