பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 அப்படியானால். இரு நாடுகளும் பெற்ற வெற்றிப் பதக்கங் களின் பட்டியலைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது அல்லவா! இதோ! நாடு தங்கப் பதக்கம் வெள்ளி வெங்கலம் மொத்தம் ரஷ்யா 911 அமெரிக்கா 220 182 174 587 150 189 508

க9) தத்தித் தப்படித் தாண்டுதல் (Hop Step & Jump) என்று அழைக்கப் பெற்ற போட்டி நிகழ்ச்சி தற்போது புதிய பெயரால் அழைக்கப்படுகிறது. அந்த புதிய பெயர் மும் முறைத் தாண்டல் (Triple Jump) என்பதாகும். தாண்டுவதில் புதிய நுணுக்கங்கள் அதிகமாகி, தத்து வதிலும், தப்படி போடுவதிலும், தாண்டிக் குதிப்பதிலும் ஏறக் குறைய ஒரே அளவு தூரம் வருவதால்தான், மும்முறைத் காண்டல் எனும் பெயரைப் பெற்றிருக்கிறது. 60) ஓட்டப் பந்தயத்தில், தவறாக ஓடத் தொடங்கி விட்டால் (False Start ) முதல் முறை மன்னிக்கப்படுகிறது. இரண்டாவது முறையும் அதே தவறைச் செய்தால், பந்தயத் கிலிருந்தே வெளியேற்றிவிட வேண்டும் என்பது விதி. கிரேக்க நாட்டில் பழங்காலத்தில் நடந்த ஒலிம்பிக் பத்தயத்தில், தவறாக ஓடத் தொடங்கியவர்களுக்கு சவுக் கூடியே தண்டனையாகத் தரப்பட்டிருக்கிறது. தண்டனையின் கடுமையைக் கவனித்தீர்களா ! அவ்வளவு கட்டுப்பாடும் உண்மைப் பற்றும் அக்காலத்தில் இருந்திருக்கின்றன. தச உ