பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபவத்தளம் நோக்கிய நமது பயணத்தைச் சற்றுத் தடை செய்வதென்னவோ உண்மைதான். வார்த்தைஜால ஆடைகளும், மணிப்பிரவாள அணிகலன்களும் அணிந்தவைதான் வயலூர் சண்முகத்தின் கவிதைகள் என்றபோதிலும் அனுபவங்கள் அரங்கேற்றும் நாடக மேடையைக் கடந்து, அவற்றின் அரிதாரம் கலைத்த நிலையிலான உண்மை சொரூபங்களைக் காண, ஒப்பனை அறைக்குள்ளேயே நுழைந்து பார்க்க, அவை தடைகளாக இல்லை என்பது முக்கியமானது. இவரது கவிதைகள் இந்த அலங்கார ஆசைகளைத் துறந்திருந்தால் மேலும் புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கக்கூடுமோ என்று தோன்றுகிறது. ஆனால் அவர் கவிதைசெய்ய முற்பட்ட காலத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டால், அந்த காலகட்டத்து கவிஞர்களிடமிருந்து, குறிப்பாக அவர் சார்ந்திருந்த திராவிடபாரம்பரிய இலக்கிய வெளிப்பாடு களிலிருந்து இந்தக் கவிதைகள் வித்தியாசமானவைகளாகவே அடையாளம் காட்டுகின்றன. இந்த காலகட்டத்துக் கவிதைகளில் பொதுவாக புராணிக நிகழ்வுகளைக் கவிதையின் உத்தியாகப் பயன்படுத்தும் போக்கு இவரிடம் ஓரிடத்தில் கூட காணப்படவில்லை என்பது வியப்பளிக்கிறது. - நிகழ்வுகள் நெஞ்சில் எழுப்பும் அலை வரிசைகளைத் தவறவிட்டுவிடாமல், அவற்றின்நூலேணி பற்றி கவிதையின் சிகரம் நோக்கி மலையேறுகிறபோது, பல்வேறு விசாரணைகளை இவர் மேற்கொள்கிறார். இவை இவரது கவிதைகள்ை வித்தியாசப்படுத்துகின்றன. இந்த விசாரணைகளின் மூலமாக இவரது கவிதைகளின் சோகமும், மகிழ்ச்சியும் கலந்த ஒரு புதுச் சுவையை உண்டாக்க இவரது படைப்புகள் சதா முயல்கின்றன.