பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப உறவுகளுக்குள் வழமை மாறாமல் உழன்று கொண்டிருக்கும் தமிழ் சினிமா, தேசிய அளவிலும் உலக அளவிலும் விரிவடைய வேண்டிய நீண்ட பயணத்தின் தொடக்கம் கூட இன்னும் நிகழவில்லையே என்ற வருத்த்ம் தொனிக்க பேசினார். -- அந்த அறையில் சோவியத் நாடு, சோவியத் ஃபிலிம், மஞ்சரி, பேசும் படம், குமுதம், விகடன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களும் இரைந்துகிடந்தன. திரையுலகில் கதாசிரியராய் வளரத் தொடங்கியுள்ள ஒரு மகா விருட்சத்தை - தனக்குள் அடையாளம் காட்டிப்பேசினார்.நாவல், சிறுகதை, கவிதை, நீள் கதைக் கவிதை - என்றெல்லாம் அந்த விருட்சத்தில் கிளைகள் பல மலிந்திருந்தன. எனக்குள் ஒரு ஞானி ஒளிந்திருப்பதாய் நான்குமணி நேர உரையாடலுக்குப் பின் சொன்னார் அவர். இப்படித் தொடங்கியது தான் எங்கள் நட்பு. தந்தையின் பிரிவால் நேர்ந்ததுயரத்தை செம்மலின் தொடர்பால் நான் இழந்து கொண்டிருந்தேன். நாடு முழுவதிலும் பரவியிருந்த அரசியல் சீர்கேடு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற துயரங்களின்பால் என் மனம் திசைமாறியது. செம்மலோடு நேர்ந்த நட்பின் நகர்வில் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் செம்மைப்படுத்தியிருந்தார் <${Elst. * - 'இடையில் ஒருநாள் நான் எழுதியிருந்த கவிதைத் துண்டுக் காகிதங்களையெல்லாம் தொகுத்து ஒரு நீண்ட கட்டுரைக் குறிப்பேட்டில் எழுதித் தரும்படி அவர் கேட்டதை நான் மதித்தேன். கவிதைகள் பலவற்றைத் தொகுத்தபோதுதான் எத்தனை கவிதைகளை நான் எழுதி அலட்சியப்படுத்தியிருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. தொகுப்பை அவரிடம் கொடுத்தபோது ஒரு மணி நேரத்துக்கு