பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேல் வாசிப்புக்குள் ஆழ்ந்த செம்மல் 'தொகுப்புக்கு என்ன பெயர் வைத்தீர்கள்?' என்றார். ‘மின்னல் விதைகள்’ என வைக்கலாம் என்றேன். அவருக்குப் பிடித்திருந்தது. “சரி” என்றார். அவருடைய கையெழுத்தால் மின்னல் விதைகள் எனப் பெயர் எழுதினார். சிறிது யோசனைக்குப் பின் 'உங்கள் பெயரில் மாற்றம் ஏதும் செய்யலாமா?” என்றார். அது, புதுக்கவிதை எழுத வருவோர் புனைபெயரில் தங்களின் புதுமுகத்தைக் காட்டிக் கொண்டிருந்த காலம். வேள்வி, வானம்பாடி இலக்கிய வெளிவட்டம், பரிமாணம் என்றெல்லாம் புதிய தமிழ் இதழ்கள் தோன்றி தமிழ்ச் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையை சீரமைத்துக் கொண்டிருந்த காலம். கல்லிகை - ஞானியும், ஒளிப்பறவை - சிற்பியும், அக்னிப் புத்திரனும், புலவர் ஆதியும் போல புதுப்புதிய புனை பெயர்களுடன் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பாமர மக்களோடு புத்திலக்கியம் வழி கைகோர்க்கத் தொடங்கிய காலம் அது. ぶ புதியதென விரியும் தமிழ்ச்சுடர் வானில் பழம் பெயர்தாங்கிப் புதுக்கவிதை படைப்பதன் பொருத்த மின்மையை நான் அப்போதுதான் எனக்குள் உணர்ந்தேன். 'யுகசிற்பி என மனதுக்குள் நான் பிறந்த அதே வேளையில் - செம்மல் என் விழிகளைப் பார்த்து “யுகசிற்பி ஆகுங்களேன்!” என்ற போது எனக்குள் ஒரு பேரதிசயம் ஒளிச்சிற்பம் ஆயிற்று. (சில வருடங்களுக்கு முன் திருச்சி ஓஷோ ஆஸ்ரம தீட்சையின்போது சுவாமி ஜீவன் ப்ரமோத் என்ற பெயர் எனக்குச் சூட்டப்பட்டது) கவிஞர் செம்மல் அவர்களின் நாயகி நிழலில் இப்படித்தான் நானும் என் முதல் கவிதைத் தொகுப்பும் கருவுற்றுப் பெயர் சூடி காலத்தின் சேவையாய் வளர்த்தோம்.