பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 39 நடைவண்டி நீ அழைத்துப் போவதுமில்லை நிஜமாக இழுத்துப் போவதுமில்லை. உனது ஜட சகடைகளை உருட்டும் சக்தி அந்த அறியாக்கைகளிடமிருந்து உனக்கு கிடைப்பது என்பதே உண்மை. ஆனால் நீதான் நடக்கக் கற்றுக் கொடுக்கிறாயாம். உண்மையைச் சொல். எங்கே கற்றுக் கொண்டாய் இந்த உத்தியை? எங்கள் ஜனநாயகத்திடம்தானே? இ.