பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தெற்கு ஜன்னலும் நானும் நீ தினம் கட்டும் நிழல் வீட்டில் - ஊர்ப் பிள்ளைகளோடு சேர்ந்து என் பிள்ளைகள் முறையாக நடத்தும் மரப்பாச்சிக் குடும்பம். விடிய விடிய வாய் ஓயாமல் காற்றோடு நீ பேசும் ஊர்க்கதை. எங்கள் வயிற்றைக் கழுவ வறுமையின் பேய்க்கரம் உன்னைப் பிரேதமாக்கி ஒரு பாரவண்டிக்காரனுக்கு தாரை வார்த்தது இவையெல்லாம் உன் கொழுந்துகளைப் போலவே ஞாபகமிருக்கிறது பச்சைப் பசேலென்று.