பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்கள் நடுங்குவது பற்றி நெஞ்சில் துயரம் நிழலாடுகிறது. ஆனாலும் புதர்கள் அகற்றப்பட வேண்டுமானால் பூக்கள் நடுங்குவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்கிற முடிவுக்கு வருகிறார் கவிஞர். இந்த இடத்தில் ஆந்திர புரட்சிக்கவி செரபண்டராஜூவின் ஒரு தெலுங்குக் கவிதையை நாம் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. 'மரங்களுக்கு உயிர் உண்டு என்ற போதிலும் அவை வெட்டப்படக் கூடாதென்று நான் சொல்ல மாட்டேன் இவைகள் இயற்கைக்கு எழில் கூட்டுகின்றன இருந்தாலும் . அவை கிள்ளப்படக்கூடாதென்று நான் சொல்ல மாட்டேன் ஏனெனில் - எனக்கு ஒரு குடிசை வேண்டும்’ இயற்கையின் மீது பரிவு கொண்டு இலைகள் கிள்ளப்படும் போதெல்லாம் துடிக்கும் கவிஞரின் மனம் ஒரு குடிசைகூட இல்லாது தவிக்கிற பஞ்சையைப் பார்க்கிற போது மேலும் இளகிவிடுகிறது. - இயற்கையை நுண்மையாகக் கவனித்து அத்துடன் இரண்டறக் கலந்துவிடுகிறபோது கூட சமூகம் குறித்த அக்கறை எப்போதும் தலைதூக்கியதாகவே உள்ளது சண்முகத்தின் கவிதைகளில். - 'அடி மழைக்குப் பின் தோட்டத்து ஈரமண்மேல்