பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நீழ 6U தெற்கு ஜன்னலும் நானும் மங்கையின் ஆசை போலோ மற்றுமவள் ஆடை போலோ அங்கங்கே பேச்சை மாற்றும் அரசியல் வணிகர் போலோ கங்குலின் சேயே உன்றன் கருநிறம் மாற்ற மாட்டாய்! திங்களில் வசித்துங் கூடச் சிறிதும்நீ மாற வில்லை! தைலியாம் என்றன் புதல்வி தம்பியாம் முத்து வுக்கே கைவிரல் நிழல்க ளாலே காட்டுமான், எருமை, யானை தொய்செவி நாய்கள் யாவும் சுவரினில் படங்க ளாகச் செய்திட்டாள்! அப்போ தோநீ சிரித்திட்டாய் கலையின் ஒளியாய்! இடம்வலி, காலம் தேர்ந்தே எதிரியைத் தாக்கப் பதுங்கும் அடல்மிகு மறவன் போலே அந்தியில் ஏற்றி வைக்கும் சுடர்விளக்குக் காலின் கீழே சொகுசாகப் படுத் திருப்பாய்! மடம்கொண்டார் வஞ்சங் கொண்டார் மனமெல்லாம் உன்றன் பண்ணை: