பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தெற்கு ஜன்னலும் நானும் வஸந்தமே வா! வா!! பூக்களின் குடும்பம் எல்லாம் புதுவிழா எடுக்கும் நேரம்: ஈக்களின் படை திரண்டே இலவச விருந்த ருந்தும் நோக்கிலே fங்கா ரிக்கும்! நுரைக்கின்ற வாலி பத்தின் ஊக்கத்தில் அனல்விழிப்பு! உயிர்க்கூத்து! அழகின் சிலிர்ப்பு! தடிக்காத வெயிலில் தோயும் தளிர்களில் கவிதை குந்தும்! படிக்காத நெஞ்சி னைப்போல் பழஞ்சருகுக் குப்பை யாகும்! கடிக்காத கரும்பைப் போலக் காதலின் தனிமை ஏங்கும்! முடிக்காத ஒருக தைக்கு முன்னுரையோ வஸந்தத் தேதி? தைநெல்லோ களஞ்சியத்தில்! தங்கநிற மேனி கொண்டு கைப்புக்கே எதிரி யாகும் கனிக்குலமோ செழுங்கி ளையில்: வைகாசி மஞ்ச ளுக்கோ வைரமும் ஈடே இல்லை! மை காட்டா வானம்! - எல்லாம் வஸந்தத்தின் பாகுப் பரிசு!