பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தெற்கு ஜன்னலும் நானும் நாளை...! துணரும்; இணரும், நாளை துளிரும்; கொழுந்தும் துளித்துளி யான நாளைகளே யாகும்! உணர்வில்; கனவில்; உயிர்ப்பில் நாளை! உதிரமே பாய்ந்து பெருகுக! ஒடுக! பற்றை, வரவை பாக்கி நிலுவையைப் பழங்கணக் காக்கி மூடி வைப்போம்! நெற்றி சுருக்கா"நாளை என்னும் நிகர லாபமே நம் கணக்கி லேறுக! பாளைக் குரும்பையே நாளை - தேங்காய்! பானை அரிசியே நாளையச் சோறு வாளை மீன்விழி நங்கையின் நாணமே வரும்மண அறத்தின் நாளையக் கற்பு