பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடலின் இடையிற் பல இடங்கனில் நிலையாமை கூறுகிறார்' என்பதும், போர் முதலானவற்றின் பயன் இன்மை குறித்துப் பேசுகிறார் என்பதும் உண்மை. இத்தகைய இடர்ப் பாட்டைப் படிப்பவர் பெறுவர் என்று கருதியே போலும் நச்சினார்க்கினியர் தமக்கே உரிய கொண்டுகூட்டு முறையில் பாடலின் அடிகளை மாற்றிக் காஞ்சித் திணைப் பொருள் பெறுமாறு செய்துவிட்டார். பாண்டியன் நெடுஞ் செழியன் வாழ்நாள் முழுவதும் போரிலேயே ஈடுபட்டிருந்து விட்டானாகலின், அவன் மனத்தை மாற்றவே ஆசிரியர் இப் பாடலை இயற்றியிருத்தல் வேண்டும். . பழைய சங்கப் பாடல்களிலிருந்து ஒரு நாடகம் அமைக்க வேண்டுமென வரின்ொலி நிலையத்தார் கேட்ட பொழுது மதுரைக் காஞ்சியே எண் மனக்கண் முன்னர் தின்றது. எனவே, ‘மதுரைக் காஞ்சியைக் கேட்ட பாண்டியன் தெடுஞ்செழியன் உலக வாழ்க்கையின் நிலை யாமை உணர்ந்து, இவ்வின்பத்தை வெறுத்து வடக்கிருந்தான் என்று முடித்தால் என்ன ?' என்ற ஓர் எண்ணம் தோன்றலாயிற்று. அவ்வெண்ணத்தின் விளைவே இந்த நாடகம். நாடகம் முழுவதும் கற்பனையேயாகும். நாடக பாத்திரங்களிலும், நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார், கல்லாடனார், சேரமான் இரும்பொறை, குறுங்கோழியூர் கிழார் என்பவர் நீங்க ஏனைய பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே ஆகும். தலையாலங்காளப் போர் மட்டிலும் பகுத்துறக் கல்லாப் பார்வல் பாசறைப் - படுகண் முரசங் காலை இயம்ப பனைகெழு ಸಿಳಿಸಿ மன்னர் ெைஆருது இக்குங் கணைஇரு முந்நீர்த் திரைஇல கனகினும் பலரே, உன்செழ் மலர்தலை உலகம் ஆண்டுகழித் தோரே' - , . (231-237)