பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wii எனப்பெறும் தொகுதியுள் அதுவே மிக நீண்ட பாடல். 782 அடிகளை உடைய அப் பாடல் காஞ்சித் திணையில் அமைந்தது என்பதை அதன் பெயரே விளக்குகிறது. அப் பாடலைப் படிக்கும்பொழுது என் மனத்தில் சில ஐயங்கள் தோன்றியதுண்டு, காஞ்சித் திணை என்பது உலக நிலையாமைபற்றிக் கூறுவது என்பது தொல்காப்பியம் கூறும் உண்மை. 'பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும் நில்லாவுலகம் புல்லிய நெறித்தே' என்பது காஞ்சித் திணையின் இலக்கணமாகும். இப் பகுதிக்கு உரை கூற வந்த உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், வீடு பேறு நிமித்தமாகச் சான்றோர் அறையுங் குறிப்பினது காஞ்சித் திணை என்பது பொருளாயிற்று' என்று கூறினார். அவ்வாறாயின், நிலையாமை அன்றோ பாடலின் திரண்ட கருத்தாய் இருத்தல் வேண்டும்? ஆனால், பாடலைப் படித்து முடிப்பவர்க்கு இறுதியாக மனத்தில் நிற்கும் கருத்து வேறு ஒன்றாய் இருக்கிறது. எழுநூறு அடிகளுக்குமேல் உள்ள பாடல் - "இலங்குஇழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்தினிது உறைமதி பெரும ! வரைந்துநீ பெற்ற நல்ஊ ழியையே.' என்ற முறையில் முடிகிறது. அஃதாவது, செழியனை நோக்கி, பெரும, உனக்கு அளந்த வாழ்நாள் கழிவதன் முன்னர், அழகிய பெண்கள் பொன்னாலாய பாத்திரத்தில் மதுவைத் தர, அதனை உண்டு மகிழ்ந்து உறைவாயாக!' என்று கூறி முடிகிறது பாடல். நிலையாமை கூறவந்த புலவர் இவ்வாறா பாடலை முடிப்பர் 1 என்ற ஐயம் தோன்றிற்று. 1. தொல்காப்பியம், புறத்திணை இயல், சூ. 23.