பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

YŁ மூன்றாவதாக அமைந்துள்ளது. கைலாசநாதர் கோயில் என்ற வரலாற்றுச் சித்திரம் ஆகும் (Documentary). வானொலி ஒன்றிற்கே உரிய தனிச் சிறப்புடையது இது. வரலாற்றுச் சித்திரத்தைப் படிக்கவும் ஒலிபரப்பவும் முடியுமே தவிர, நடித்தல் இயலாத காரியம். காஞ்சியை ஆண்ட பல்லவர்களுள் 'இராஜசிம்ம பல்லவன் மிகவும் புகழ் வாய்ந்தவன். பெரிய புராணத்தில் இடம்கொண்ட பூசலார் நாயனார் காலத்தில் வாழ்ந்தவன் ஆவான் இவன். "அசரீரி கேட்டவன்" என்ற விருதுப்பெயரையும் உடையவன். அவனால் அமைக்கப்பெற்ற இம் மாபெரும் கலைக்கோயில் இறைவன் தன் பழைய இருப்பிடமாகிய கயிலையைவிட்டு வந்து குடியேறக்கூடிய அத்துணைக்கலைச் சிறப்புவாய்ந்த இடமாகும். அதுபற்றி இன்றுவரை வெளிவந்துள்ள வரலாறுகள், கல்வெட்டுகள், கர்ண பரம்பரைக் கதைகள் ஆகிய ஆதாரங்களைக்கொண்டு இவ்வொலிச்சித்திரம் ஆக்கப்பெற்றுள்ளது. நாடகத்தையே படித்துப் பழக்க முள்ளவர்கள் இவ் வரலாற்றுச் சித்திரத்தில் காணப்படும் குரல் 1, 2, 3, 4 என்பதனைக் கண்டு மருள வேண்டா. பல செய்திகளை - வரலாற்றுக் காலத்தில் நடந்த செய்திகளை - வெளியிடுவதற்கு இக் குரல்தாம் உதவியாக அமைந்து விடுகின்றன. o - நான்காவதாக அமைந்துள்ளது 'சேரமான் இரும் பொறை என்ற நாடகமாகும். புறநானூற்றில் வரும் "குழவி இறப்பினும்" என்ற பாடலையும் பழைய உரையாசிரியரின் விளக்கத்தையும் தழுவி இந் நாடகம் ஆக்கப் பெற்றது. - மதுரைக் காஞ்சி என்பது பத்துப் பாட்டில் காணப் பெறும் ஓர் அழகிய பாட்டு, மாங்குடி மருதனார் என்னும் புலவர் பெருந்தகையார் தலையாலங்காளத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்மேல் பாடியது அது சங்கப் பாடல்கள்