பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் ஒளி 213 நட : நான் எப்படிச் சண்டை போடுவது? அவன் தான் என்னைப் பைத்தியம் என்று கூறிவிட்டானே! அமு : அப்படிப் பேசும் பிள்ளை அல்லவே அவன்! நீர் என்ன சொன்னர்? நட : நான் சொன்னதிருக்கட்டும். அவன் வணங்கும் அபிராமி அம்பிகையின் கையிலும் கழுத்திலும் உள்ளது நாகமாம். அதனால், அவளுடைய . அடியானாகிய அவனை அது தொடாதாம்! அமு : ஆஹா! என்ன பக்தி! எனக்கு அப்பவே தெரியும். நட அடே, அப்பவே தெரியுமா உமக்கு? என்ன தெரியும் உமக்கு? - அமு : அவன் பக்தியின் ஆழம். அவன் அபிராமி உபாசகன் என்பது தெரியாதா உமக்கு? நட ஓ! அப்படிச் சொல்லும் ! வாம மார்க்கத்தவனா? ஐயோ! பாவம்! நம்ம கடவூர்ப்பட்டருக்கு இப்படி ஒரு பிள்ளை பிறக்கவேண்டுமா? அமு : என்ன ஐயா, உளறுகிறீர்? வாம் மார்க்கமாவது, அபிராமிபட்டனாவது? என்ன சம்பந்தம்? நட அட தெரியுங்காணும் எனக்கு! நான் சந்தேகப்பட்டது சரியாப்போச்சு! அல்லாவிட்டால் அவனுக்கு ஏன் இவ்வளவு அகங்காரம்? பெரியவா சின்னவான்னு பார்க்கிறானா? இருக்கட்டும் பார்க்கிறேன்! அ.மு என்னங்காணும் அகங்காரம்? உம்மை ஏன் பைத்தியம் என்று கூறினான்: நட அதுவா? நான் பைத்தியமாம். அல்லாவிட்டால் அம்பிகையைப் பூசை செய்கிற நான், பாம்புக்குப் பயப்படக்கூடாதாம். அமு : பின்னே, நீர் ஏன் இவ்வளவு பயப்பட்டீர்?