பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளையவன் 233 இந் விட இந் விட இந் வீட இந்

பாவம்! அரசின்மேற்கொண்ட ஆசையால் பழியையும் மறந்து பகையை வாழ்த்தப் புறப்பட்டுவிட்டீர்! ஆனால், நீருள்ளவரையே வாழும் மீன்கள் போல அரக்கர் இராவணர் உயிருள்ள வரைதான் இருப்பர்; அவரோடு சேர்ந்து அழிவர்; பின்னர் இலங்கை மட்டும் மிஞ்சும்; ஏன்? நீரும் இருப்பீர். ஆனால், யாரை அரசாள உத்தேசமோ? - : நான் நியாயம் என்று தெரிந்த ஒன்றுக்காகத் தான்

இத்தகைய காரியஞ் செய்தேன்.

நீர் மட்டுமா நியாயத்தைக் கண்டீர்? மந்திரி சபையில் கும்பகருணச் சிற்றப்பர் பேசியது உம் காதில் விழவில்லையா? அவரும் உம்மைப் போல நியாயத்தைக் கண்டார். ஆனால், மானத்தை இழக்க அவர் விரும்பவில்லை. -
இந்திரசித்து, நான் மானம் இழந்தேன் என்று யார்

கூறுகிறார்? r

ஏன்? உலகம் உள்ள அளவும் கூறும்: நான்முகன் குலத்து வந்தவர் நீர்; இலங்கையையும் ஆளப்போகிறீர். உம்மைத் தேவரும் வந்து அடி வணங்குவர். ஆனால், நீரோ, மனிதருக்கு அடிமை யாகி இராவணர் செல்வத்தை ஆள்வீர். இனி உமக்கு ஏனோ மானம்! அது எங்களோடு அடங்கிற்று ஐயா!
சிறுவ! நான் அறவுரை கூறினதற்கு உன் தந்தையார் கோபித்துக்கொண்டு என்னைப் போ' என்று கூறினதால்தானே நான் வந்தேன்?

ஆம்! அது தெரியும். தந்தையார், தம் விழி எதிர் நிற்க வேண்டா என்றுதானே கூறினார்? பகைவரிடஞ் சேர்ந்து நிகும்பலை வேள்வியைக் காட்டிக் கொடுத்து