பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1W இந்தத் தருணத்தில் நாடகங்களைப்பற்றிய பொது வான சில கருத்துகளை ஆராய்வது பொருத்தமுடையதே. இடைக்காலத்தில் முத்தமிழ் என்ற வழக்கு ஏற்பட்டாலும் மிகப் பழங்காலந்தொட்டே தமிழில் நாடகக் கலை பயின்று வந்துள்ளது என்பது அறிய முடிகிறது. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்திற்கு உரை வகுத்த அடியார்க்குநல்லார் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவரேனும், பல நாடக இலக்கண் நூல்களின் பெயரைக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் நூல்களுள் ஒன்றேனும் நம் காலத்தில் அகப்பட்டிலது. அவை போனாலும், நாடகம் என்று கூறத்தக்க ஒரு நூலாவது பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இன்று கிடைத்திலது. முத்தமிழ் என்று வழங்கப்பெற்ற மொழியில் ஒரு நாடகங்கடக் காலதேவனது கையிற் சிக்காமல் நிலைபெற முடியவில்லை என்பது வியப்பையே விளைக்கிறது. ஆனால், இதிலிருந்து ஒர் உண்மையை நாம் அறிய முடிகிறது. மேனாட்டு இலக்கியத்தில் காணப்பெறுவது போலப் படிப்பதற்கென்றே ஏற்பட்ட நாடகங்கள் தமிழ் மொழியில் இல்லை. அனைத்தும் நடிப்பதற்காகவே எழுதப்பெற்றன. நாட்டில் நடிப்பு அருகியவுடன் நாடக நூல்களும் அழிந்து ஒழிந்தன. இக் குறைபாட்டைப் போக்க முற்பட்டவர்கள் பேராசிரியர் கந்தரம்பிள்ளை அவர்களும் பேராசிரியர் பரிதிமாற் கலைஞர் அவர்களும். இவ்விருவரும் இயற்றிய நாடகங்கள் மேனாட்டு நாடகப் பாணியில் அமைந் தவைகளே. இற்றை நாளில் திரு. பம்மல் சம்பந்த முதலியார் போன்ற பெரியார் சிலர் நாடகக் கலைக்கு அரும்பாடு பட்டுள்ளனர். .