பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ம் கயிலாசநாதர் கோயில் ஆஸ்-கவி : ஆம் அரசே! மறக்க முடியாத இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பிற்காலச் சந்ததியார்களும் அறிந்து கொள்ளும்படியாகப் பாடல்களாகப் பாடியிருக் கின்றேன். இப் பாடல்களை இராஜசிம்மேஸ்வரம் என்று வழங்கப்போகும் இக் கோயிலைச் சுற்றியே கல்வெட்டுகளில் பொறித்துவைத்துவிட, தங்கள் ஆணையை எதிர்பார்க்கின்றேன். இராஜ : அப்படியா! மிகவும் மகிழ்ச்சி. எங்கே உமது பாடல்கள் சிலவற்றை, விளக்கத்துடன் எங்களுக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஆஸ்-கவி : இதோ! - 'முப்புரங்களை அழித்த பரமேஸ்வரனுக்குக் குமாரன் என்றும் குகன் என்றும் சொல்லப்படும் சுப்ரமணியன் தோன்றியதுபோல, உக்கிரசண்டன் என்ற பெயரை உடைய பரமேஸ்வரவர்மனுக்கு-ரண ரஸிகனாகிய சாளுக்கியனுடைய ந்கரத்தை அழித்தவனாகிய பரமேஸ்வரனுக்கு, பெருமை பொருந்திய அத்யந்தகாமன் என்ற பெயரை உடைய ராஜசிம்மன்-சைவசித்தாந்த நெறியைப் பரப்புகின்ற ராஜசிம்மன் தோன்றினான். இந்தப் பொருள்படும் படியாக இதோ இந்த ஸ்லோகத்தை அமைத்துள்ளேன். - z தேஸாம்வம்ஸ்ே ப்ரசூதாத் ரணரலிக ப்ரோர்மர்த்தநா . தக்ர தண்டாது ஸ்-ப்ரமண்ய: குமாரோ குஹஇவ பரமாத் ஈஸ்வராது

  • 출 ஆத்தஜந்மா ஸ்க்தி: சுந்நாரி வர்க்கோ விதிதிபஹுநயஸ்

- - சைவசித்தாந்த மார்க்கே புரீமாந் அத்யந்தகாம: ஷதஸ்கலமலோ தூர்த்தர > பல்லவாநாம்