உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மனைமாட்சி என்ன செய்வேன்! வள்ளுவர் இந்த அரிய சொல்லாட்சியை இன்னும் பல குறள்களில் அமைத்து வைத்திருப்பதை ஆங் காங்கே சுட்டுவேன். 'இவ்வளவு நன்மையிருந்தும் எனையா ஒருவன் செய்யக்கூடாது?’ என்று உலக வழக்கில் வியந்து வினவு வதுபோல் 'என் ஒருவன் கல்லாதவாறு என்று ஆசிரியர் வினவுகிருர் - வியக்கிருர் மேலும் சாகும்வரை படிக்க வேண்டும் என்கிருர். இப்போது நம் நாட்டில் நூற்றுக்குப் பத்துப் பதினைத்து பேர் படித்திருப்பதாகக் கணக்கெடுத் திருக்கிருர்களல்லவா? இந்தக் குறைந்த அளவுங்கூட, கையெழுத்தப் போட்டால் ஒர் எழுத்துக் குறைபவர்கள் உட்பட (கையெழுத்துக்கே இந்தக் கதி என்ருல்..... ), பெரிய எழுத்து விக்கிரமாகித்தன் கதைக்காரர்கள் உட்பட, என், மாமியார் விட்டில் அஞ்சல் கடிதத்தைப் படிக்க நேர்ந்தபோது, நான் இளமையில் அட்டையில் பார்த்ததற்கு இதில் எழுத்துக்கள் அநியாயமாய் இளைத்து விட்டனவே என்று ஓவெனக் கதறி ஒப்பாரி வைத்தழுத மாப்பிள்ளை மக்குச் சாம்பிராணி உட்பட எடுத்த கணக் காகத்தான் இருக்கக்கூடும். இதுவா படிப்பு மாணவர் களே. பள்ளிப்படிப்பை முடித்ததும் நாற்களை ஏறக்கட்டி விடுவீர்களோ? அது கூடாது. எந்தத் தொழில் செய்யினும் ஒய்வு கிடைக்கும்போதெல்லாம் படிப்பீராக! என்கிரு.ர். என் கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு, 'கல்வி கரையில கற்பவர் நாள் சில - ஆதலின், சாந்துணை யுங் கற்கச் சொல்கிரு.ர். இப்பொழுது இக்குறட் கருத்தில் ஒரு புரட்சிப் புயல் வீசப்போகிறது:- "எந்த காட்டாரும் எந்த ஊரா ரும் படிக்கலாம். இங்கே வசதியில்லை என்று ஏய்க்காதேஎந்த நாட்டுக்கும் எந்த ஊருக்கும் சென்று படிக்கலாம். உடல்நலம் இல்லை-பணவசதியில்லை என்று ஏய்க்காதேபடிப்பினல் செத்தாலுஞ் சரி - சாகும்வரை படி. படிப் பவனுக்கு எந்த நாட்டிலும் எந்த ஊரிலும் இடங் கொடுத்து மகித்து, சாகும் வரையுங்கூட ஆதரிக்கவேண் டும் - இதுதான் சிந்தனையைச் சுழற்றும் அந்தப் புரட்சிப் புயல் : (இதுவே தொடரும்)