பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பொருட்பால் அதாவது தீர்மானித்து ஓர் உறுதியான முடிவுக்கு வருதல் என்றும் இரு பொருள் கூறலாம். இவ்விரண்டு கருத்துக் களுமே ஏறக்குறைய ஒன்ருே டொன்து தொடர்புடை யனவே! தைரியம் உடையவன்தானே எதிலும் திட்ட வட்டமான ஒரு முடிவுக்கு விரைந்து வருவான் ? இல்லா தவன், வண்டைக்காய் போல் வழி வழா குழ குழா' என்று வளர்த்திக் குட்டை குழப்புவான். இப்படி யிருங் தால் அரசாங்கத்தில் எந்தக் காரியத்தை நிறைவேற்ற முடி யும்? தீர்மானத்தை ஒத்திப்போட்டுக் கொண்டே போக வேண்டியதுதான். அப்புறம் காடு, கட்டாற்றில் அவிழ்த்து விட்ட கட்டுமரங்தான்! இப்போது புரியுமே இக்குறட் கருத்து! 5. மான முடையது அரசு ( தெளிவுரை ) அறநெறி வழுவாமலும், தீமைகளைக் களேந்தும், வீரங்குன்ருதும் மானத்துடன் விளங்குபவனே அரசன். “ அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு “ (பதவுரை) அறன் இழுக்காது= அறநெறி தவருமல், அல்லவை நீக்கி - நல்ல செயல்களல்லாத தீய செயல்களைப் போக்கி, மறன் இழுக்கா(த) - வீரத்துக்குப் பழுதில்லாத, மானம் உடையது அரசு = மானம் உடையவனே அரசன். (அறன்-அறம், இழுக்குதல்-தவறுதல்-வழுவுதல்; அல் லவை-தீயவை; மறன்-மறம்-வீரம்.) (மணக்குடவர் உரை) அறத்திற்றப்பாம லொழுகி, - r - - - - * அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து, மறத்திற்றப்பாத மானத்தை புடையவன் அரசன்.